கஸ்தூரி கொரகையவர் கணக்கன்பட்டி ஸ்ரீ அக்கமார் ஈஸ்வரி வரலாறு


kasthuriyar kuladaivam

திண்டுக்கல் - கரூர் நெடுஞ்சாலையில் திண்டுக்கல்லிலிருந்து பதினைந்து கி.மீ தூரத்தில் பாடியூர் என்ற சிற்றூர் உள்ளது.

 'பாடி' என்ற பெயருடைய  மூதாட்டி  தெய்வ சிலைகளையும் பொருட்களையும் வைத்து வழிபட்டுவந்தாள். மூப்பின் காரணமாக வழிபாட்டினை நடத்த இயலாத சூழல் ஏற்பட்டது.

paadiyur patti akkama eswari valipaduthal

இப்பொறுப்பை யாரிடமாவது ஒப்படைக்க வேண்டும் என எண்ணித் தக்க வாய்ப்புக்காக  எதிர்பார்த்துக்  காத்திருந்தாள்.

kasthuriyar kolayavar paadiyur

அச்சமயம் கஸ்தூரிக் கொரகையவர் குலத்தவர்களும், அவர்களது மாமன் உறவு முறைக்காரர்களான கோலையரும் பொதிமாட்டில் பொருட்களை ஏற்றிக்கொண்டு வணிகத்திற்காகத் திண்டுக்கல் நகரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

kasthuriyar kolayavar iyyampalayam

அப்போது பாடி மூதாட்டி அவர்களைப் பார்த்து உங்களின் பொதிமாடுகளுக்குத் தேவையான தவிட்டை மொடாக்களில் போட்டு வைத்துள்ளேன். அதை எடுத்துச் சாக்கில் போட்டுக்கொண்டு போய் சமமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். நலமோடு வாழுங்கள் என வாழ்த்தி அவற்றைக் கொடுத்தார். மொடாவிலிருந்து தவிட்டை சாக்கில் போடும்போது ஏதோ 'கல கல' என்று ஓசை எழுந்தது. பாட்டி எதையோ ஏமாந்து தந்துவிட்டாள் என்று கருதி, அவசர அவசரமாக மூட்டையை கட்டிக் கொண்டு வேடசந்தூரை நோக்கிப் பயணப்பட்டனர்.

kasthuriyar kolayavar iyyampalayam valipadudhal

அய்யம்பாளையம் என்ற ஊருக்கு  அருகில் வந்ததும் அந்த ஊரின் ஆற்றங்கரைத் தோப்பின் மரநிழலில் அமர்ந்து கொண்டு தவிட்டு மூட்டையை அவிழ்த்து, 'கல கல' என ஒலி எழுப்பிய  பொருள் எது என்று ஆர்வமுடன் பார்த்தனர். அதில் தெய்வச் சிலைகள் இருந்தன.

அப்போது அங்கிருந்த ஒருவருக்கு அருள்வந்து, பாடியூரில் கூன் கிழவி உங்களுக்கு நல்ல வாக்குத் தந்து தெய்வங்களையும் கொடுத்துள்ளாள். அதை முறைப்படி பூசித்து வந்தால் உங்கள் வாழ்வில் எல்லா மேன்மைகளும் கிடைக்கும் என்று கூறினார்.

kasthuriyar kolayavar iyyampalayam valipadudhal

தெய்வங்களின் சிலைகளில் 'சின்னம்மன்' 'பெரியம்மன்' 'பொட்டியம்மன்' 'குங்குமாயி' 'குங்குமக் காளியாயி' 'கருப்பணசாமி' என்ற பெயர்கள் எழுதப்பட்டிருந்தன.இவற்றையெல்லாம் எடுத்துப் போய் பள்ளபாளையம் என்ற ஊரில் வைத்து வழிபாடு நடத்தினர்.

kasthuriyar kolayavar misunderstanding

சிலகாலம் கழித்து இவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டது. கோலையர் மூவரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு அவரவருக்கு கையில் கிடைத்த சிலைகளை எடுத்துக் கொண்டு பிரிந்து போய்த் தனித்தனி வழியில் நடக்கத் தொடங்கினர். ஒருவர் பெரியம்மன், சின்னம்மன் சிலைகளையும், பேழையின் மூடியையும் பருத்தியூருக்கு எடுத்துச்சென்று  அங்கு வைத்து வழிபாடு நடத்தினர். அவர்கள் 'பருத்தியூர் கோலையர்' எனப்பட்டனர்.

kasthuriyar kolayavar separates god

இரண்டாமவர் குங்குமக் காளியம்மன் சிலையையும் மலையாளச்சாமி சிலையையும் எடுத்துக் கொண்டு மூலனூருக்கு அருகில் உள்ள சாளரப்பட்டி எனும் ஊரில் வைத்து வழிபாடு நடத்தினர். இவர்கள் 'மூலனூர் கோலையர்' எனப்பட்டனர்.

மூன்றாமவர், பொட்டியம்மன் மற்றும் குங்குமாயி சிலைகளை எடுத்துக்கொண்டு போய் வேடசந்தூரில் வைத்து வழிபட்டனர். இவர்கள் 'வேடசந்தூர் கோலையர்' எனப்பட்டனர்.

மீதமுள்ள 108  சிலைகளை எடுத்துக்கொண்டு வந்து கோலையரின் மாப்பிள்ளைமார் கணக்கன்பட்டியில் ஓர் ஓலைக் குடிசையில் வைத்து வழிபாடு செய்தனர். இவர்கள்  கஸ்தூரிக்  கொரகையவர் எனப்பட்டனர்.  இவர்கள் வழிபட்ட தெய்வம் அக்கமார் ஈஸ்வரி எனும் சப்தமாதர்களாகும்.

kasthuriyar paalai valipadu

ஒரு முறை ஓலைக்குடிசையில் தீப்பற்றிக் கொண்டது. அங்கிருந்து அனைத்துப் பொருட்களும் தீக்கிரையாகின. ஆனால் தெய்வச் சிலைகள் வைக்கப்பட்டிருந்த ஐந்து பேழைகள் மட்டும் தீவிபத்தால் எவ்விதப்பாதிப்பும் இன்றி இருந்த அற்புத நிகழ்வைப் பார்த்து அனைவரும் வியந்தனர்.

kasthuriyar paalai kudisai fire

அதற்குப் பிறகுதான் தற்போதுள்ள இடத்தில் கோயில் அக்கமார் ஈஸ்வரிக்கு எடுக்கப்பட்டது.

kasthuriyar koil kattappattadhu


Kasthuriyar Mandagappadi-18_10_2014

Kasthuriyar Mandagappadi-18_10_2014

Kasthuriyar Mandagappadi-18_10_2014

Shrinidhy Performance in Kasthuriyar Kumbabishagam 2014 :

Shrinidhy Performance in Kasthuriyar Kumbabishagam 2014

Shrinidhy Performance in Kasthuriyar Kumbabishagam 2014

Kasthuriyar Pirandhaveettu Pengal Kumbabishekam Seeru Vurvalam 2014:

Kasthuriyar Pirandhaveettu Pengal Kumbabishekam Seeru Vurvalam 2014

Kasthuriyar Pirandhaveettu Pengal Kumbabishekam Seeru Vurvalam 2014

Kasthuriyar Kumbabishekam 31-08-2014:

Kasthuriyar Kumbabishekam 31-08-2014

Kasthuriyar Kumbabishekam 31-08-2014

Kasthuriyar Kumbabishekam Ganapathy Homam 29-08-2014:

Kasthuriyar Kumbabishekam Ganapathy Homam 29-08-2014.

Kasthuriyar Kumbabishekam Ganapathy Homam 29-08-2014.

kasthuriyar kumbabishekam preparation 2014:

kasthuriyar kumbabishekam preparation 2014.

kasthuriyar kumbabishekam preparation 2014.

Kasthuriyar Pirandhaveettu Pengal Kumbabishekam Seeru 2014:

Kasthuriyar Pirandhaveettu Pengal Kumbabishekam Seeru 2014.

Kasthuriyar Pirandhaveettu Pengal Kumbabishekam Seeru 2014

Kanakanpatti AkkamaEswari Kumbabishegam Invitation to Paruthivuur Kolavar:

Kanakanpatti AkkamaEswari Kumbabishegam Invitation to Paruthivuur Kolavar.

Kanakanpatti AkkamaEswari Kumbabishegam Invitation to Paruthivuur Kolavar

Kasthuriyar Koragayar Kumbabishegam Invitation To Kodayur Kunguma KaliAmman Mulanur Kolavar:

24 Manai Telugu Chettiar 8 Veedu Kasthuriyar Kumbabishegam Invitation Distributed To 24 Manai Telugu Chettiar 16 Veedu Kodayur Kungumakkali Amman Mulanur Kolavar

Kasthuriyar Koragayar Kumbabishegam Invitation To Kodayur Kunguma KaliAmman Mulanur Kolavar

Kanakanpatti AkkamaEswari Kumbabishegam Invitation to Vedasandur Kolavar:

8 Veedu Kasthuri Koragayar, Kanakanpatti AkkamaEswari Kumbabishegam 31.07.2014 invitation to 16 Veedu Vedasandur Kolavar

Kanakanpatti AkkamaEswari Kumbabishegam Invitation to Vedasandur Kolavar

Kanakanpatti AkkamaEswari Kumbabisagam 30.06.1999 :

8 Veedu Kasthuri Koragayar, Kanakanpatti AkkamaEswari Kumbabisagam 30.06.1999

24 Manai Telugu Chettiar Samugathinar Aadi 18 Tiruvila at Marina Beach